பயிற்சி மருத்துவ மாணவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்வு -முதலமைச்சர் பழனிசாமி!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பயிற்சி மருத்துவ மாணவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்ககோரி தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். 


இது குறித்து அவர் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயிலும் இறுதியாண்டு சுழற்சிமுறை உள்ளிருப்பு பயிற்சி மாணவர்கள் மற்றும் அரசு மருத்துவரல்லாத முதுகலை பட்டம், பட்டயம் மற்றும் உயர்சிறப்பு மருத்துவம் பயிலும் மாணவர்கள்,  தங்களுக்கு ஊக்கத்தொகையினை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


இதனை ஏற்று, மாதாந்திர ஊக்கத்தொகை கட்ந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், உள்ளிருப்பு பயிற்சி மருத்துவ மாணவர்களுக்கு 13 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும்  உயர்த்தப்பட்டுள்ளது. 


முதுகலை பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு 40 ஆயிரம் ரூபாயாகவும் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. உயர்சிறப்பு மருத்துவ மாணவர்களுக்கு 35,000 ரூபாயில் இருந்து 45,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.