மக்களவை தேர்தலை முன்னிட்டு திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, கோவை மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனனை போக்குவரத்து துறையின் முதன்மை செயலாளராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 12 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தின் சுகாதாரத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த ராதாகிருஷ்ணன், போக்குவரத்து துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது.  அவரது இடத்தில், புதிய சுகாதாரத் துறை செயலாளராக பீலா ராஜேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், கூட்டுறவு சங்க பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


வணிகவரித்துறை செயலாளர் பாலச்சந்திரன், பதிவுத்துறை ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். பத்திரப்பதிவு ஐ.ஜி-யாக பணியாற்றி வந்த குமரகுருபரன், பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையராக பொறுப்பேற்கவுள்ளார். திருச்சி, புதுக்கோட்டை, கோவை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர்களும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.