அதிகாரிகள் அலட்சியம்.. பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற திருநங்கை
சிவன்யா என்ற திருநங்கை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம்: திருநங்கைகள் கொடுத்த மனுவை அதிகாரி ஏற்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற திருநங்கை. அது சம்பந்தமான எந்த வேலையும் தொடங்காமல் காலம் கடத்துவதாகவும் அதை நினைவூட்ட கலெக்டரிடம் மீண்டும் மனு அளிக்க சிவன்யா தலைமையில் திருநங்கைகள் வந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பகுதியை சேர்ந்த திருநங்கைகள் இலவச பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த போது அவர்கள் கொடுத்த மனுவை அதிகாரிகள் ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் சிவன்யா என்ற திருநங்கை பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீசார் மற்றும் அலுவலர்கள் திருநங்கைகளிடம் இருந்து பெட்ரோலை பறித்து கீழே ஊற்றினர்.
ALSO READ | இளைஞர் சுட்டு கொலை; தென் தமிழகத்தில் தலை தூக்குகிறதா துப்பாக்கி கலாச்சாரம்?
அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் திருநங்கைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்ற 26 அம் தேதி இலவச பட்டா வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டதை அடுத்து, தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தங்களுக்கு இலவச வீடு ஒதுக்கும்படி நீண்டகாலமாக தாலுகா அலுவலகம் அற்றும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்து வருவதாகவும், ஆனால், அது சம்பந்தமான எந்த பணியையும் தொடங்காமல் காலம் தாழ்த்தி வந்தாகவும், மீண்டும் மனு கலெக்டர் அலுவலகம் வந்தால், அதிகாரிகள் எங்கள் கோரிக்கையை ஏற்காமல், அலட்சியம் செய்து வந்ததால், தர்ணாவில் ஈடுபட்டோம் என திருநங்கைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ALSO READ | ‘பச்சையப்பாஸ் மாணவர்கள் போட்ட உயிர் பிச்சை வேண்டாம்’ என ரயில் முன் பாய்ந்து தற்கொலை!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR