திருச்சி, தாராநல்லூரை அடுத்த வரகனேரி விஸ்வாஸ் நகரில் வசித்தவர் 46 வயதான பெண் நவீன். அவர் சமையலறையில் ஏற்பட்ட தீ விபத்தால் இறந்தார் என்று காந்தி மார்க்கெட் போலீசாருக்கு நேற்று மாலை தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருச்சி காந்தி மார்க்கெட் காவல்துறையினர், நவீனின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | கடன் சுமையால் மனைவி, மகன்களை கொன்று வங்கி ஊழியர் தற்கொலை


பிரேதப் பரிசோதனை விவரங்கள் வெளியாகாத நிலையில், நவீன் தலையில் பல்வேறு இடங்களில் கம்பியை வைத்து குத்தியதற்கான அடையாளங்கள் காணப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவரது மருமகள் ரேஷ்மா, மாமியாரை ஸ்குரூ டிரைவரால் தலையில் பல முறை குத்தியும், அம்மிக்கல்லை தலையில் போட்டும் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்தார்.


நவீனுக்கு தனது மகன் ஆசிம்கான் ரேஷ்மாவை காதல் திருமணம் செய்து கொண்டதில் இருந்தே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. முதல் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது குழந்தை வேண்டாம் என்று மாமியார் நவீனா வற்புறுத்தியதாக தெரிவித்த ரேஷ்மா, கடந்த ஜனவரியில் அவரது வலுக்கட்டாயத்தால் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், கடுமையான வயிற்று வலியை அனுபவித்து வந்ததால், மாமியார் நவீன் மீது கடும்கோபத்தில் இருந்ததாகவும் காவல்துறையிடம் கூறியுள்ளார். கொலை செய்ததை மறைக்க தீவிபத்து என்று நாடகமாடியதையும் அவர் ஒப்புக்கொண்டார். 


அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட காவல்துறையினர், இந்த கொலைக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ALSO READ | ஜனவரி 5-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR