திருமலை திருப்பதியில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தரிசிக்க இந்தியா முழுவதிலும் இருந்து மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார், இலவசமாக பொதுமக்கள் திருப்பதி செல்ல பேருந்து சேவையை நேற்று துவங்கி வைத்தார். இது மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. 


அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார், திருப்பதி திருமலை தேவஸ்தான அறங்காவலர் குழுவின் உறுப்பினராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். 


இந்நிலையில், வேலூரில் இருந்து இலவசமாக பொதுமக்கள் திருப்பதி செல்ல பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் நந்த குமார், நேற்று துவங்கி வைத்தார். மார்ச் 1-ந்தேதி முதல் வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் இருந்து மினி பஸ் காலை 7:30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்குள் வேலூர் திரும்பும். 


மேலும் படிக்க | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்


மேலும் திருமலை திருப்பதி கோவிலில் ஒரு மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்யும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிற்பகல் திருமலை அன்னதான கூடத்தில் மதிய உணவுக்கும் ஏற்பாடு செய்யப்படும். வாகனத்தில் குறைந்த இடவசதி இருப்பதால் ஒரு குடும்பத்தில் ஒன்று அல்லது 2 பேர்  செல்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும்.


இலவச சேவையை பெற இலவச தரிசன சேவைக்காக வேலூர் திமுக அலுவலகத்தில் முன்கூட்டியே பக்தர்கள் தங்களது ஆதார் விவரங்களை அளித்து பதிவு செய்துக்கொள்ள வேண்டும்  என சட்டமன்ற உறுப்பினர் நந்த குமார் கூறினார்.


சேலம், தருமபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை  உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான நபர்கள் வேலூர் வழியாக திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களுக்கு திமுக சட்டமன்ற உறுப்பினரின் இந்த சிறப்பு சேவையானது பயனளிக்கும் வகையில் உள்ளதாக சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிகின்றன.


மேலும் படிக்க | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR