ஏழுமலையானை தரிசிக்க ஹெலிகாப்டர் சேவையா; உண்மை என்ன..!!
திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. இக்கோவிலில் வீற்றிருக்கும் ஏழுமலையான தரிசிக்க இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயம் உலகப் புகழ் பெற்றது. இக்கோவிலில் வீற்றிருக்கும் ஏழுமலையான தரிசிக்க இந்தியா மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் லட்சக் கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
சில நாட்களுக்கு முன்னதாக அனைத்து மாநில பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வரும் பக்தர்கள், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது மூன்று நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சர்டிபிகேட் ஏதாவது ஒன்றை உடன் கொண்டு வரவேண்டும் என்றும் தேவஸ்தானம் (TTD) அறிவித்துள்ளது.
ALSO READ | காவாளம்: திருப்பதி உண்டியல் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள்
வைணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் திருப்பதிக்கு ஏழுமலையானை தரிசிக்க ஹெலிகாப்டரில் அழைத்து செல்வதாக தனியார் நிறுவனம் ஒன்று சமீபத்தில் விளம்பரம் செய்திருந்தது. சென்னையை சேர்ந்த வாசிவி யாத்திரா என்னும் டிராவல்ஸ் நிறுவனம் சென்னை, கோயம்புத்தூர், பெங்களூருவில் இருந்து திருப்பதிக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்து வருவதற்கும், 5 நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கும், உணவுக்கான ஏற்பாடும் செய்யப்படும் என அறிவித்து, அதற்கான கட்டணங்களை அறிவித்தது.
இதற்கான பேக்கேஜில் ஏழுமலையான் கோயில், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் விஐபி தரிசனம் உணடு எனக் கூறிய அந்த தனியார் நிறுவனம். இதற்கு ரூ.1,11,116 செலவாகும் என்ற தகவல் சமூக வலைதளத்தில் அதிகளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம், இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. முக்கிய பிரமுகர்கள் மற்றும் அவர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு மட்டுமே விஐபி தரிசனம் வழங்கப்படுகிறது என்றும், எனவே, இதுபோன்ற அறிக்கைகளை நம்ப வேண்டாம் எனவும் திருப்பதி தேவஸ்தானம் தெளிவுபடுத்தியுள்ளது. பக்தர்களை ஏமாற்றும் விதத்தில் விளம்பரம் செய்து வரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் எச்சரித்துள்ளது
ALSO READ | TTD: திருப்பதிக்கு காணிக்கையாக கிடைத்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் நிலை என்ன
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR