டிடிவி தினகரன் தனது அடையாறு இல்லத்தில் வழக்கறிஞர் ஜீனசேனனை வரவழைத்து அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற, லஞ்சம் வாங்கிய விவகாரம் தொடர்பாக ஒருவர் கைதானதைத் தொடர்ந்து, இது குறித்து டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த டெல்லி போலீஸ் சென்னை வருகிறது.  


இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தர சசிகலா அணியிடம் லஞ்சம் பெற்றதாக சுகேஷ் சந்திரா என்பவர் கைது செய்யபட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட சுகேஷ், இரட்டை இலைச் சின்னத்துக்காக தினகரனிடம் ரூ. 50 லட்சம் பேரம் பேசியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரிடம் இருந்து ரூ. 1.30 கோடியை, லஞ்ச ஒழிப்புப் போலீஸ் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக டெல்லி போலீசார் டிடிவி தினகரன் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 


இந்த நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த, ஏ.சி.பி சஞ்சய் ராவத் தலைமையில் டெல்லி போலீஸ் இன்று சென்னை வருகிறது. சுகேஷின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதனால், டி.டி.வி.தினகரனுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. அவர் லஞ்சம் கொடுத்தது உறுதி ஆகும் பட்சத்தில், கைதுசெய்யப்படுவார் எனத் தகவல்கள் கூறுகின்றன.


டெல்லி போலீஸ் இன்று அல்லது நாளை சென்னை வர உள்ள நிலையில், தினகரன் தனது இல்லத்தில் வழக்கறிஞர் மற்றும் அதிமுக அமைச்சர்களுடன், கடந்த ஒரு மணிநேரமாக தீவிர ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.