போலீஸார் மீது முகஸ்டாலின் குற்றச்சாட்டு!
ஆர்கேநகர் தொகுதியில் பல பகுதிகளில் நேற்றிரவு வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடைபெற்றது. 2000 ரூபாய் கட்டாக வைத்து கொண்டு வீடுவீடாக பணம் கொடுத்தனர்.
அப்போது பணப்பட்டுவாடா நடந்த இடங்களில் திமுகவினர் தடுத்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் திமுக வினர் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. படுகாயம் அடைந்த 3 பேரும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறும் திமுகவினரை சந்தித்து ஆறுதல் கூறினார். நல்ல முறையில் சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களை கேட்டுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்:-
ஆர்கேநகரில் டி.டி.வி தினகரன் அணியினர் நள்ளிரவில் பல பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணப்பட்டு வாடா செய்துள்ளனர். இதை கண்டுபிடித்த திமுகவினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தும் அவர்கள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அப்படியே பிடித்து கொடுத்தாலும் பணப்பட்டு வாடாவில் ஈடுபடுபவர்களை போலீசார் தப்பிக்க விடுகின்றனர்.
வாக்காளர்களுக்கு ரூ. 4000, ரூ. 5000 என ஏரியாவுக்கு தக்கபடி பணம் கொடுக்க அ.தி.மு.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர். வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த ரூ. 1 கோடி வரை பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
இது பற்றி தலைமை தேர்தல் அதிகாரியிடம் நாங்கள் முறையிடுவோம். தி.மு.க.வினர் இதுவரை 27 புகார்களை கொடுத்துள்ளனர்.
பணம் கொடுக்கும் சசிகலா அணியினரை போலீசார் ஒப்புக்காக கைது செய்துவிட்டு விட்டு விடுகிறார்கள். பெரா அணி டி.டி.வி தினகரனின் கைக்கூலியாக போலீசார் செயல்படுகிறார்கள்.
ஜனநாயகத்தை படுகொலை செய்து பண நாயகம் மூலம் தேர்தலில் வென்று விடலாம் என நினைக்கிறார்கள். அது நிறைவேறாது.
இவ்வாறு அவர் கூறினார்.