தமிழக அரசியலில் கமல், சீமான் மற்றும் டிடிவி-யின் வரவு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களிடம் டெல்லி மாணவர்களின் வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் பிடித்துக் கொண்டனர் என்ற ஆம் ஆத்மி கெஜ்ரிவால் கருத்து குறித்த கேள்விக்கு கேட்கப்பட்டது.


இதுகுறித்து பதில் அளித்த தமிழிசை தெரிவிக்கையில்., டெல்லி மக்களாக இருந்தாலும், டெல்லியில் வாழுகின்ற தமிழக மக்களாக இருந்தாலும், டெல்லியில் வாழுகின்ற தென்னிந்திய மக்களாக இருந்தாலும் அவர்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்ததான் இந்த முயற்சி.


சகோதரர்களாக ஒன்றாய் தலைநகரில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் ஒரு மாநிலத்தைச் சார்ந்தவர்களை மட்டும் காழ்ப்புணர்ச்சியோடு பேசும் பொழுது அதை மாற்ற மாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். 


இதற்கு முன்னால் இதே பிரித்தாளும் காங்கிரஸ் முயற்சி செய்து மதத்தினால், இனத்தினால், மொழியால் பிரித்து அதன் மூலம் அதிக வாக்குகளை பெறுவதைப் போல கெஜ்ரிவால் இன்று நடைமுறைப்படுத்த முயற்சி செய்கிறார் என தெரிவித்தார். 


மேலும் வரும் தேர்தலில் அவர் நிச்சயமாக தோல்வி அடைவார் எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் நேற்றைய "பிரச்சாரத்திலேயே பார்த்திருப்பீர்கள் எவ்வாறு எதிர்ப்பு கிளம்பியது என்று. சகோதரர்களாக தலைவர்கள் வாழுகின்ற தலைநகரில் தென்னிந்திய மக்களும் வட இந்திய மக்களும் ஒன்றாக இந்திய மக்களாக வாழ்கின்ற நிலையில் பிரித்தாளும் சூழ்ச்சியை கெஜ்ரிவால் செய்கிறார். அது நிச்சயமாக பலனளிக்காது" எனவும் தெரிவித்தார்.


தொடர்ந்து டெல்லி மாணவர்களின் வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் பிடித்துக் கொண்டனர் என்ற ஆம் ஆத்மி கெஜ்ரிவால் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர் பதிவிட்டிருக்கிறாரே என்ற கேள்விக்கு "பிரகாஷ்ராஜ் எல்லாம் ஒரு தலைவராக அவருடைய கருத்துகளுக்கு எல்லாம் நான் பதில் வேறு சொல்ல வேண்டுமா. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை" என தெரிவித்தார்.


தொடர்ந்து தமிழக அரசியலில் கமல், சீமான், டிடிவி வரவு குறித்து கேள்வி கேட்கப்பட்ட போது "மூவரின் வரவும் தமிழக அரசியலில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை" என தெரிவித்தார்.