BSNL அலைக்கற்றையை திருடிய இருவர் கைது; போலீசார் ரகசிய விசாரணை
தேனி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு பேசி வந்த கேரளாவை சேர்ந்த இரண்டு வாலிபர்களை தேனி நகர போலீசார் கைது செய்தனர்.
தேனி மாவட்டத்தில் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் இளநிலை தொலை தொடர்பு அலுவலர் முனியாண்டி என்பவர் தேனி நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் பி.எஸ்.என்.எல் அலைகற்றையை சட்ட விரோதமாக பயண்படுத்தி சிலர் வெளிநாடுகளுக்கு பேசி வருவதாக புகார் கூறியிருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் தேனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கினர். இதில் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் தேனி மாவட்டத்திற்கு வந்து அல்லிநகரம் மற்றும் ஆண்டிபட்டி பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர்.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) அலைக்கற்றையை சட்டவிரோதமாக அவர்கள் வைத்திருக்கும் இணைப்பு சாதனம் (டிவைஸ்) மூலமாக 10க்கு மேற்பட்ட பிஎஸ்என்எல் சிம்கார்டுகளை பயன்படுத்தி கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு நாடுகளுக்கு பேசி வந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் படிக்க | EPFO for NRI: வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான முக்கிய செய்தி, எக்கச்சக்க பயன்கள்
போலீசாரிடம் சிக்கிய இருவரும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் அலைகற்றையை சட்டவிரோதமாக பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு இத்தனை அழைப்புகள் பேசியது எதனால்? யாரிடம் பேசினார்கள்? வெளிநாட்டு அழைப்புகள் மூலம் பேசியவர்களிடம் பணம் வசூல் செய்து சம்பாதித்து (பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்) பிஎஸ்என்எல்க்கு இழப்பை ஏற்படுத்தினார்களா? அல்லது போலீசாரிடம் சிக்கிய இருவரும் தீவிரவாத செயலில் ஈடுபடுவதற்காகவா? தீவிரவாத செயல்களில் ஈடுபடுபவருக்கு உதவவா? அல்லது சட்ட விரோதமான அமைப்புகளுடன் இணைந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்காகவா? என்ற கோணங்களிலும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
அத்துடன் கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் தேனி போலீசிடம் சிக்கியதை அறிந்த மற்றொரு கேரள நபர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. சதிச்செயலில் ஈபடுவதற்காக கேரளாவில் இருந்து வந்துள்ளார்களா மேலும் பலர் பதுங்கி உள்ளனரா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | EPFO விதிகளில் மாற்றம்: நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ