கோவை பாஜக அலுவலக விபத்து தொடர்பாக இருவர் கைது!
கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்!
நேற்றைய தினம் பெரியார் சிலை குறித்து சர்சைக்குறிய கருத்தினை H.ராஜா அவர்கள் பதிவிட்டார். இந்த பதிவிற்கு பின்னர் தமிழகம் முழுவதும் அவருக்கு எதிர்புக்கள் குவிந்தவண்னம் உள்ளது.
இதனையடுத்து இன்று காலை கோவை பாஜக அலுவலகத்தில், பெட்ரோல் குண்டு வீசப்பட்டதகாவும், அதற்கு காரணம் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் எனவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், தற்போது இந்த விவகாரம் தொடர்பாக ஜீவ நாதன் மற்றும் பாலு என்னும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தந்தை பெரியார் திராவிட கழகத்தினை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த பின்னர், பாதுகாப்பு துறை அமைச்சர் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க பாதாப்பு எச்சரிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மேலும் இத்தகு சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இன்று காலை வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியர் சிலையின் தலை பகுதி மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது!