ஸ்ரீதியாகராஜரின் 173 ஆம் ஆண்டு ஆராதணை விழா இன்று!!

திருவையாறில் நடந்த 173 ஆம் ஆண்டுக்கான பஞ்சரத்தின கீர்த்தனையில் ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.
திருவையாறில் நடந்த 173 ஆம் ஆண்டுக்கான பஞ்சரத்தின கீர்த்தனையில் ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர்.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரானவர் தியாகராஜர். இந்த விழா தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி கரையோரம் அமைந்துள்ள அவரது சமாதியில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தியாகராஜரின் 173-வது ஆராதனை விழா கடந்த 11ஆம் தேதி தொடங்கியது.
அதன் முக்கிய நிகழ்வாக, இன்று நடந்த பஞ்சரத்தின கீர்த்தனையில் ஏராளமான கர்நாடக இசைக் கலைஞர்கள் பங்கேற்றனர். தியாகராஜர் சமாதி முன்பு அவருக்கு பிடித்த ராகங்களில் கீர்த்தனைகளைப் பாடி இசை அஞ்சலி செலுத்தினர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.