தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே புதிதாக அனல் மின் நிலையம் அமைக்க்கும் திட்டம் நேற்று செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் எடப்பாடி பழனிசாமி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் மின்சார வாரிய 894 களப்பணி உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அனல் மின் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டி, களப்பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


 
இவ்விழாவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயல் பாதிப்பின் போது, மின்வாரிய ஊழியர்கள் செய்த சிறப்பான பணிகள் குறித்த குறும்படம் திரையிடப்பட்டது. அடிக்கல் நாட்டு விழாவை உடன்குடியில் இருந்தபடி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் என்.வெங்கடேஷ்.  


இவ்விழாவில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- இந்தியாவிலேயே தமிழ்நாடு தொழில் துறையில் முதன்மையான இடத்தில் உள்ளது. இதற்கு காரணம், ஜெயலலிதா பதவியேற்ற போது இருந்த மின்சார பற்றாக்குறை நிலைமையை முழுவதுமாக அகற்றி இருண்டு கிடந்த தமிழ்நாட்டை மிளிரச் செய்து, மின்மிகை மாநிலமாகவும் மாற்றிக் காட்டுவேன் என்று சபதம் ஏற்று, அந்த சபதத்தை நிறைவேற்றும் விதத்தில் பல்வேறு திட்டங்களைத் தீட்டி செயல்படுத்தினார். 


அதன் காரணமாக இன்று தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்கிறது என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன். தமிழ்நாட்டில் 2010-ம் ஆண்டு மரபுசாரா எரிசக்தி ஆதாரங்களையும் சேர்த்து 16 ஆயிரத்து 873 மெகாவாட்டாக இருந்த மாநிலத்தின் மின் நிறுவு திறன், தற்போது 29 ஆயிரத்து 492 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. 


இதில் 2011-ம் ஆண்டிலிருந்து மட்டும் 10 ஆயிரத்து 673 மெகாவாட் மின்சாரம், மாநில மற்றும் மத்திய தொகுப்பு மின் திட்டங்கள், மின் கொள்முதல் மற்றும் சூரிய மின்சக்தி மூலம் தமிழ்நாடு மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு மின் தேவையில் தன்னிறைவு அடைந்தது மட்டுமல்லாமல் மின்மிகை மாநிலமாகவும் திகழ்கிறது.


எதிர்வரும் காலங்களில் மாநிலத்தின் எரிசக்தி தேவையை கருத்தில் கொண்டு, 46 ஆயிரத்து 821 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 6 ஆயிரத்து 200 மெகாவாட் அளவிற்கு மின் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் கூடுதலாக, 53 ஆயிரத்து 890 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 ஆயிரத்து 300 மெகாவாட் அளவிற் கான புதிய மின் திட்டங்கள் நிறுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.


இந்த தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில், தற்பொழுது, தலா 660 மெகாவாட் திறன் கொண்ட 2 அலகுகளை உடைய உடன்குடி அனல் மின் திட்டம் நிலை 1-க்கான பணி ஆணை பாரத மிகுமின் கழகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020-2021ம் ஆண்டில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி மக்களுக்கும், விவசாயிகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் உடனுக்குடன் பயன்கள் சென்றடைய மனித சக்தி அவசியமாகும். அதை நன்கு உணர்ந்த தமிழக அரசு, 2011-ம் ஆண்டு முதல் பல்வேறு பிரிவுகளில் சுமார் 7 ஆயிரத்து 619 காலி பணியிடங்களை நிரப்பியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, இன்று 894 கள உதவியாளர் பதவிக்கு பணி நியமன ஆணை வழங்குவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.


இவ்வாறு காலி பணியிடங் களை அவ்வப்போது நிரப்பி, மின் தேவையினை மக்களுக்கு உடனுக்குடன் வழங்கிட எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாகத்தான், ‘தானே’ புயலின் போதும், ‘வர்தா’ புயலின் போதும், சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தைத் தாக்கிய ‘ஒகி’ புயலின் போதும் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களினால் சாய்ந்த மின் கம்பங் களை போர்க்கால அடிப் படையில் சரி செய்து, மக்களுக்கு உடனடி மின் சேவை வழங்க முடிந்தது என்பதை பெருமையுடன் நினைவுகூர விரும்புகிறேன்.


இந்த துறையில் 80 ஆயிரம் பேர் பல்வேறு மட்டங்களில் பணிபுரிந்து வருகின்றார்கள். இவர்கள் சிறப்பான முறையிலே பணியாற்றிய காரணத்தினால் இன்றைக்கு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவு மின்உற்பத்தி செய்கின்ற மாநிலம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது என்பதை இந்த நேரத்திலே கோடிட்டுக்காட்ட விரும்புகின்றேன். இவ்வாறு அவர் பேசினார்.