உதயநிதி ஸ்டாலின் என்னும் நான் என்று தொடங்கி தமிழகத்தின் அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின்.  கவர்னர் மற்றும் முதலமைச்சர் முன்னிலையில் பொறுப்பேற்றுக்கொண்டார்.  சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ-வாக உதயநிதி ஸ்டாலின் 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார்.  இவர் வெற்றி பெற்ற உடனே அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.  இருப்பினும் கடன் ஓர் ஆண்டாக எந்தவித பொறுப்புகளும் வழங்கப்படாமல் இருந்து வந்தது.  கட்சி பணி மற்றும் சினிமாவில் கூடுதல் கவனம் செலுத்தி வந்தார்.  இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார் என்று அதிரகார்வப்பூர்வ தகவல் வெளியானது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உதயநிதி ஸ்டாலின் என்னும் நான்... அமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி!


இந்நிலையில் தற்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவோம் என தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம், அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுவேன்.  விமர்சனங்களுக்கு எனது செயல்பாடுகள் மூலம் பதில் அளிப்பேன், தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட ஒவ்வொரு தொகுதிக்கும் மினி ஸ்டேடியம் என்ற வாக்குறுதியை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன். என்னுடைய கடைசி திரைப்படம் மாமன்னன், நடிகர் கமல்ஹாசன் திரைப்படத்தில் நடிக்கவில்லை. முடிந்தவரை அமைச்சர் பதவியில் சிறப்பாக செயல்படுவேன், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி" என்று கூறினார். 


தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.


 



மேலும் படிக்க | அமைச்சர் ஆனா உடனே உதயநிதிக்கு வந்த முதல் கோரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ