கலைஞர் கருணாநிதி நினைவு தினம்: உருகிய உதயநிதி ஸ்டாலின்
கலைஞரின் பேரனும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி நினைவு நாளையொட்டி உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
தி.மு.க வின் தலைவரும் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து மறைந்தவருமான முன்னாள் முதலமைச்சர் மறைந்த கருணாநிதி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு நாள் இன்று. காலை முதலே தி.மு.கவைச் சேர்ந்தவர்களும் அரசியல் கட்சியினரும் அவரது நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி வயது மூப்பின் காரணமாக தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி உயிரிழந்தார். அவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் தமிழக மக்களால் அனுசரிக்கப்படுகிறது. மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞரின் நினைவிடத்தில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் (M.K.Stalin) மற்றும் எம்எல்ஏக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கலைஞரின் (Kalaignar Karunanidhi) பேரனும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உருக்கமான பதிவு ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். "தன் போராட்ட பெருவாழ்வு மூலம் கோடான கோடி தமிழ் மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்து, தன் அண்ணனின் (அறிஞர் அண்ணா) பக்கத்தில் ஓய்வெடுக்கும் சமூகநீதி சூரியன் முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடத்தில் அவரின் 3ம் ஆண்டு நினைவு தினமான இன்று மலர்தூவி மரியாதை செய்தோம். இளைஞரணி செயலாளர்- சட்டமன்ற உறுப்பினர் என பல பாராட்டை பெற்றாலும், பாராட்ட கலைஞர் இல்லாத ஏக்கம் துரத்துகிறது. அவர் வழியில் நம்மை இயக்கும் மாண்புமிகு முதல்வரின் கரம்பற்றி தமிழ்நாட்டின் மேன்மைக்கு உழைப்போம். வாழ்க கலைஞரின் புகழ்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ: மு.கருணாநிதியின் 3ம் ஆண்டு நினைவு தினம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி
சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். சமீபத்தில் வீடு வீடாக சென்று மக்களின் குறைகளை அவர் கேட்டறிந்தார்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR