ஒடிசாவில் மிகப்பெரிய கோர ரயில் விபத்து நடந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு நடைபெற்றிருக்கும் மோசமான ரயில் விபத்தில் இதுவரை 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டிருப்பதால் உடனடியாக தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகளும், உதவி மையங்களும், ஹெல்ப்லைன் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சென்னையில் சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இதனை மருத்துவ துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் நேரடியாக ஆய்வு செய்து, ஏற்பாடுகளை தயார்படுத்தியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து! ஏன் தெரியுமா?


விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை அழைத்து வரவும் தமிழக அரசு சார்பில் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. குறிப்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மூத்த அதிகாரிகள் குழுவுடன் ஒடிசாவுக்கு புறப்பட்டு சென்றிருக்கின்றனர். அம்மாநிலத்தைச் சென்றடைந்த அவர்கள், இப்போது விபத்து நடந்த பகுதியான பாலாசூர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் செல்கின்றனர். இதற்கு ஒடிசா மாநிலம் சார்பில் சிறப்பு விமானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.


விபத்து நடந்த பகுதிக்கு செல்லும் அவர்கள், மீட்பு பணிகளுக்கு தேவையான உதவிகளை கொடுக்க இருக்கின்றன. குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் விரைந்து கிடைக்க முயற்சி எடுக்க உள்ளனர். படுகாயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் தாமதமின்றி கிடைக்கவும், உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களது உடல்களை தமிழகம் கொண்டுவருவதற்கு தேவையான உதவிகளையும் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான அமைச்சர்கள் குழு செய்ய இருக்கிறது. 


மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் ஒடிசா செல்லவும் தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மாலை புறப்படும் சிறப்பு ரயில் மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்பட இருக்கின்றனர். அவர்களை அங்கு ஒருங்கிணைத்து தங்க வைக்கவும், தமிழக அரசு சார்பிலான இந்த குழு நடவடிக்கை எடுக்க உள்ளது. ஒடிசாவில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தைச் சேர்ந்த பயணிகள் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என தெரியவில்லை. விரைவில் அந்த தொடர்பான தகவல்களை பெற்று, அவர்களுக்கு தேவையான உதவிகள் அரசு சார்பில் செய்யப்படும் என தெரிவித்தார்.   


மேலும் படிக்க | ஒடிசாவில் விபத்தில் சிக்கிய தமிழர்கள் நிலை என்ன? - முதலமைச்சர் ஸ்டாலின் பதில்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ