தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்று ஓராண்டு முடிவடைய உள்ள நிலையில், அவரது மகனும், எம்.எல்.ஏ-வுமான உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு உதயநிதியின் உயிர் நண்பர் அன்பில் மகேஷ் மிகப்பெரிய அளவில் உதவி வருவதாகவும் கூறப்படுகின்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், புதிதாக சிலருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தது. முதன்முறையாக தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.



மேலும் படிக்க | பெரம்பூர்: பிரபல ரவுடியை கொல்ல 'ஸ்கெட்ச்' போட்ட 4 ரவுடிகள் கைது!


அவர் பதவியேற்று ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், ஒருமுறை மட்டுமே அமைச்சரவையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது. போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான புகார்களை அடுத்து அவர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டார். இந் நிலையில் தற்போது சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நிறைவடைந்தவுடன் தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்ய கட்சித் தலைமை திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 


ஏற்கனவே அமைச்சரவையில் இருக்கும் ஒரு சில மூத்த அமைச்சர்கள் மாற்றப்பட வாய்ப்பிருப்பதாகவும், இந்த இலாகா மாற்றத்தின் போது உதயநிதி ஸ்டாலினுக்கு உள்ளாட்சித்துறை ஒதுக்கப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. 


பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அன்பில் மகேஷ் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர். எப்போதுமே இருவரும் ஒன்றாக அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். அதோடு பலமுறை செய்தியாளர்கள் சந்திப்பில், உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்று வெளிப்படையாக பேசியுள்ளார். அதோடு சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதியிடம்,நீங்கள் துணை முதலமைச்சராக ஆவீர்களா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ஏன் எனக்கு தகுதி இல்லையா? உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்று கலாய்க்கும் வகையில் பதிலளித்தார். 



மேலும் படிக்க | இலங்கை மக்களுக்கு உதவ நிதி தாருங்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்


அமைச்சர் சேகர் பாபுவும் உதயநிதிக்கு அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். அதேநேரம் உதயநிதி ஸ்டாலின் அடிக்கடி தனது தொகுதியான சேப்பாக்கம் பக்கம் சென்று பார்வையிட்டு வருகிறார். உண்மையில் முதலமைச்சரை விட உதயநிதி ஸ்டாலின் புகழை தான் திமுக எம்.எல்.ஏக்களும் சரி, அமைச்சர்களும் சரி பேசி வருகின்றனர்.


இதற்கு கட்சிக்குள் எதிர்ப்பும் உள்ள நிலையில், இந்த சமயத்தில் அவரை அமைச்சரவையில் இணைப்பது சிக்கலாக முடியும் என முதலமைச்சர் மறுத்து வந்ததாக கூறப்படுகின்றது. ஆனால் தற்போது அன்பில் மகேஷ், உதயநிதிக்கு மக்கள் மத்தியில் நல்ல மதிப்பு உள்ளதால் அவரை அமைச்சரவையில் சேர்ப்பது சரியானதாக அமையும் என்று சிபாரிசு செய்துள்ளதாக சில உடன்பிறப்புகள் தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல உதயநிதியும் எந்த ஒரு பிரச்சனையிலும் இதுவரை சிக்கவில்லை. 


உள்ளாட்சித்துறை அமைச்சராகவோ அல்லது செய்தித்துறை அமைச்சராக உதயநிதி நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆந்திர அமைச்சரவை சில வாரங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது. அதில் நடிகை ரோஜாவுக்கு இடம் கிடைத்தது. சமீபத்தில் முதலமைச்சரை சந்தித்த அவர், ஆந்திர அரசியல் சூழல் குறித்து மு.க.ஸ்டாலினிடம் பேசியதாக கூறப்படுகின்றது.


இந்த மாற்றத்தால் மக்கள் மத்தியில் கட்சி மீது நல்ல பெயர் ஏற்பட்டுள்ளதால், அதையே தமிழகத்திலும் முதலமைச்சர் முயற்சி செய்ய வாய்ப்புள்ளது. துணை முதலமைச்சராக உதயநிதி நியமிக்கப்படலாம் என்று பேசப்படுகிறது. ஆனால் இதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. விரைவில் இந்த தகவல்கள் உண்மையா என்பது தெரிந்துவிடும். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR