இன்று முதல் சுரங்க மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!
திருமங்கலம் – நேரு பூங்கா இடையேயான சுரங்க மெட்ரோ ரயில் சேவை இன்று முதல் தொடங்குகிறது.
சென்னை மாநகரின் போக்குவரத்தை குறைக்கும் மெட்ரோ ரயில் சேவை பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. 45 கிமீ தூரம் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ பாதைகள் அமைக்கப்படுகின்றன.
இந்த சுரங்க ரயில் பாதை சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடக்கி வைக்க உள்ளார். நேரு பூங்கா முதல் கோயம்பேடு வரை சுமார் 8 கிமீ தூரம் இந்த சுரங்க ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சுரங்க ரயிலில் பயணிக்கும் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்தும் மெட்ரோ துறையினரால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.