Amit Shah TN Visit Cancelled: மக்களவை தேர்தல் நடைபெறுவதையொட்டி தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் தேர்தல் ரேஸில் முன்னணியில் உள்ளன. தமிழ்நாட்டை பொறுத்தவரை 39 தொகுதிகளிலும் இந்த என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணி மட்டுமின்றி அதிமுக கூட்டணியும் முன்னணி வகிக்கிறது எனலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி இம்முறை நடைபெறுகிறது. இதில் பாஜக முன்பை விட சற்று பலம் பொருந்தியதாக காட்சியளிக்கிறது. அதன் உண்மை நிலவரம் என்பது தேர்தல் முடிவுகள் வெளியானாலே தெரியவரும் எனலாம். மேலும், முதல் தலைமுறை வாக்காளர்கள், திராவிட கட்சிகள் மீதான வெறுப்பு ஓட்டுகள் ஆகியவற்றை மொத்தமாக அறுவடை செய்ய பாஜக திட்டமிட்டிருந்தாலும் அது வெற்றிக் கனியை கொடுக்கும் அளவிற்கு இருக்குமா என்றால் சந்தேகம்தான். 


பாஜகவின் நட்சத்திர வேட்பாளர்கள்


இந்த தேர்தலில் 19 இடங்களில் பாஜக நேரடியாக போட்டியிடுகிறது. அதில் மத்திய இணைய அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதியிலும், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தென் சென்னை தொகுதியிலும், முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியிலும், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியிலும், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியிலும், நடிகை ராதிகா விருதுநகர் என தொகுதியிலும் என நட்சத்திர வேட்பாளர்களை இறக்கி வாக்கு சதவீதத்தை அதிகரிக்க முயல்கின்றனர். 


மேலும் படிக்க | மேள தாளங்கள் முழங்க ஏராளமான தொண்டர்களுடன் பிரசாரத்தை தொடங்கிய தயாநிதி மாறன்!


பாஜக கூட்டணி கட்சிகள்


பாஜக கூட்டணியில் பாமக 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா தர்மபுரி தொகுதியிலும், பிரபல திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் கடலூர் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதுமட்டுமின்றி அமமுகவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அக்கட்சி சார்பாக தேனி தொகுதியில் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறது. 


அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் ஓபிஎஸ், பாஜக கூட்டணியில் அதுவும் பலாப்பழம் என்ற தனிச்சின்னத்தில் ராமநாதபுரத்தில் களமிறங்கி இருக்கிறார். ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தூத்துக்குடி உள்ளிட்ட மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன, அக்கட்சி சைக்கிள் சின்னத்தில் 


2026 தேர்தலுக்கான ஏற்பாடு


இதுமட்டுமின்றி பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம் வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் விழுப்புரம் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தலைவர் தேவநாதன் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் தென்காசி தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். எனவே, 39 தொகுதிகளில் 23 வேட்பாளர்கள் தாமரை சின்னத்தில் போட்டியிடுவதால் கட்சியின் ஓட்டு சதவீதத்தை உயர்த்துவது மட்டுமின்றி அடுத்த 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான முன்னேற்பாடகவும் பாஜக இந்த தேர்தலை அணுகியுள்ளது.


மேலும் படிக்க | மக்களவைத் தேர்தல் 2024: தமிழ்நாட்டில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை.. உஷார்!


எனவே, பிரதமர் நரேந்திர மோடி மட்டுமின்றி பாஜகவின் அனைத்து கட்ட தலைவர்களும் தமிழ்நாட்டில் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். பிரதமர் மோடி வரும் ஏப். 9ஆம் தேதியில் இருந்து அடுத்து சுமார் நான்கு நாள்கள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரப்புரை பொதுக்கூட்டங்களிலும், ரோட் ஷோ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.  


அமித் ஷா பயணம் திடீர் ரத்து


அதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தேர்தல் பரப்புரையை மேற்கொள்ள தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஏப். 4, 5 ஆகிய இரண்டு தினங்களில் அமித் ஷா தென்மாவட்டங்களில் பாஜக வேட்பாளர்களுக்காக பரப்புரை செய்ய வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அவர் கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் அமித் ஷா பரப்புரை செய்யப்பட இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், இம்முறை மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரத்தில் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. 


இதற்காக அவர் இன்று இரவு அமித் ஷா மதுரை பழங்காநத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேச இருப்பதாக திட்டமிடப்பட்டது. அதை தொடர்ந்து, தேனி, ராமநாதபுரம், சிவகங்கைக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என கூறப்படவில்லை. இருப்பினும், பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் இந்த பயணத்தை ரத்து செய்திருப்பதாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்திற்கு பின் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | பாசிச சக்திகளுக்கு எதிரான தேர்தலில்.. இந்தியா கூட்டணி வெல்லட்டும்! ஜனநாயகம் மலரட்டும்! -கனிமொழி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ