தூத்துக்குடி: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பொதுசிவில் சட்டத்தை காங்கிரஸ் தொடர்பாளர் குஷ்பு ஆதரிப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காவிரி பிரச்சனை கடந்த 40 ஆண்டுகளாக உள்ளது. மேலும் 4 மாதத்தில் முடியக்கூடிய பிரச்சனை இல்லை என்றும் கர்நாடகாவில் ஆட்சி கலைய வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்றம் கர்நாடகாவில் எப்போது தேர்தல் வந்தாலும் காங்கிரஸ் வீழ்த்தப்படும் என தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


பின்னர் மதுரை செய்தியார்களிடம் பேசிய அவர், திருப்பரங்குன்றம் இளைஞர்கள், நவம்பர் 19-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. மேலும் ஒரு குழு அமைத்து வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தடுக்க வேண்டும் என்றார். பொதுசிவில் சட்டத்தை குஷ்பு ஆதரித்து பேசுவது வரவேற்கத்தக்கது என்றும் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.