வரலாறு காணாத வகையில் பருத்தி நூல் விலை - அழிவை நோக்கி செல்லும் ஜவுளித் தொழில்..!
வரலாறு காணாத வகையில் பருத்தி மற்றும் நூல் விலை உயர்ந்துள்ளதால், தமிழக ஜவுளித் துறை கடும் இன்னலை சந்தித்து வருகிறது.
இந்தியாவில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பைத் தருவது ஜவுளித் துறை. நேரடியாகவும், மறைமுகமாகவும் கோடிக்கணக்கானோர் இத்தொழிலை நம்பியுள்ளனர்.இந்நிலையில், மூலப் பொருளான நூலின் விலை கடந்த சில மாதங்களாகவே அபரிவிதமாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக, இந்த மாதம் மட்டும் கிலோ ரூ.40 வரை விலை உயர்ந்து, ரூ.470-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல, அதிர்ச்சி தரும் வகையில் பருத்தி விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நூல் விலை இன்னும் உயருமோ என்று ஜவுளித் துறையினர் அஞ்சியுள்ளனர்.நூல் விலை உயர்வால், கொங்கு மண்டலத்தில் திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம், கரூர் மாவட்டங்களில் உள்ள பின்னலாடை மற்றும் ஜவுளி சார்ந்த தொழில் நிறுவனங்கள் கடும் இன்னலைச் சந்தித்துள்ளன. நூல் விலையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியும், இதுவரை மத்திய அமைச்சர்கள் கண்டுகொள்ளவில்லை என்று வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனால் எதிரொலியாக திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் பின்னலாடை நிறுவனங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.ஒரே நாளில் ரூ.300 கோடிக்கு மேல் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.இதேநிலை தொடர்ந்தால், பல்லாயிரக்கணக்கான ஜவுளி நிறுவனங்களை மூட வேண்டியிருக்கும். லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் உருவாகும். பின்னலாடைத் தொழில் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்து வரும் கோடிக்கணக்கான ரூபாய் அந்நியச் செலாவணியையும் இழக்க நேரிடும்.
மேலும் படிக்க | ரூ100ஐ தாண்டிய தக்காளி விலை - என்ன காரணம்?
இதனால், பருத்தி மற்றும் நூல் ஏற்றுமதியை ரத்து செய்துவிட்டு, உள்நாட்டுத் தேவைக்குப் போதுமான நூல் கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நூல் இறக்குமதிக்கான வரியை ரத்து செய்ய வேண்டும். பருத்தியைப் பதுக்கிவைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜவுளித் துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | Lab Grown Meat: ஆய்வகத்தில் இறைச்சி உற்பத்தி! எதிர்கால உணவுக்காக சீனாவின் திட்டம்
அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலில் பருத்தியை இடம்பெறச் செய்வதுடன், பதுக்கல்காரர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். எல்லா விவகாரங்களைப்போல நூல் விலையைக் கட்டுப்படுத்துவதிலும் அரசு அலட்சியம் காட்டினால், கோடிக்கணக்கான தொழிலாளர்களின் கடும் சீற்றத்துக்கு உள்ளாக நேரிடும் என்று அரசியல் கட்சியினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR