கிணத்தை காணோம்... வடிவேலு பாணியில் போஸ்டர் ஒட்டிய உத்திரமேரூர் கிராம மக்கள்..!!
வடிவேலு திரைப்பட நகைச்சுவை காட்சி போல் கிணற்றை காணவில்லை என்று பொதுமக்கள் சுவரொட்டி ஒட்டி உள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடிவேலு கிணறு காணவில்லை என்ற நகைச்சுவை காட்சி போல் உத்திரமேரூர் அருகே அரசு பொது கிணற்றை காணவில்லை என கிராம பொதுமக்கள் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரணை ஊராட்சியின் சார்பு கிராமமான நடுப்பட்டு கிராமத்தில், பஜனை கோவில் தெருவில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கிணறு தோண்டப்பட்டு, கடந்த மாதம் வரை பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.
கிணற்றுக்கு போதிய பாதுகாப்பு மூடிகள் இல்லாததால் கடந்த 22ஆம் தேதி 30 வயது மதிக்க பெண் ஒருவர் அதன் மேல் அமர்ந்து இருந்த நிலையில் திடீரென கிணற்றில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டார். இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் சார்பாக அந்த கிணற்றின் மேல் மூடி அமைக்க வேண்டுகோள் விடப்பட்டது.
இந்நிலையில் சில தினங்களுக்குள், அந்த கிணற்றினை ஜேசிபி உதவியுடன் தரைமட்டமாக்கி மூடி உள்ளனர். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவரிடம் கேட்டபோது முறையான பதில் இல்லாததால், BDO உள்ளிட்ட பல துறை அரசு அலுவலருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க | மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளேன் - நீதிபதி முன்பு சவுக்கு சங்கர் முறையீடு!
ஆனால் இது தொடர்பான எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் கிணற்றை காணவில்லை என சமூக வலைதளங்கள், சுவரொட்டிகள் மூலம் அப்பகுதியை சுற்றி விளம்பரம் செய்து வருகின்றனர்.
வடிவேலு திரைப்பட நகைச்சுவை காட்சி போல் கிணற்றை காணவில்லை என்று பொதுமக்கள் சுவரொட்டி ஒட்டி உள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க | குற்றால அருவி வெள்ளத்தில் சிக்கிய சிறுவன் சடலமாக மீட்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ