சசிகலா சுற்றுப்பயணம்.. உற்சாக வரவேற்பு அளித்த தொண்டர்கள்
இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்த சசிகலாவுக்கு வாகைக்குளம் பகுதியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
சென்னை: தென்மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா, "அதிமுக ஒரே குடும்பம், பிள்ளைகளை நிச்சயம் சந்திப்பேன்" என சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார். மேலும் சசிகலாவுக்கு அதிமுகவில் ஆதரவு நாளுக்கு நாள் பெருகி வருவதால், அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் இன்று முதல் சசிகலா தென்மாவட்ட சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார். அங்கு அதிமுக நிர்வாகிகளை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தால், எடப்பாடி தரப்புக்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்ப்பது தொடர்பாக அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விரைவில் சந்தித்து பேச உள்ளனர்.
மேலும் படிக்க: சமாதானம் ஆனார் ஓபிஎஸ்? அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரத்து!
இதற்கிடையில் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடி வந்த சசிகலாவுக்கு வாகைக்குளம் பகுதியில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர்.
அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் நெல்லை கே.டி.சி. நகருக்கு சென்ற அவருக்கு அங்கும் ஏராளமான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதேபோல இன்று மாலை திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதன் பின்னர் இன்று இரவு திருச்செந்தூரில் தங்கி ஓய்வு எடுக்கிறார்.
மேலும் படிக்க: கொங்கு மண்டல நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை..!
நாளை எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யாவுள்ளார். இன்று மற்றும் நாளை தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக பல கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
இதைத்தொடர்ந்து 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு, மதுரைக்கு சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை தோர்`திரும்ப உள்ளார்.
மேலும் படிக்க: சசிகலா அவர்களே வருக.. ஓபிஸ்-ஈபிஸ் அவர்களே வெளியேறுக -ஒன்றுகூடும் அதிமுக நிர்வாகிகள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR