கொரோனா மூன்றாவது அலையை (Corona Virus Third Wave) கருத்தில் கொண்டு, தமிழக மக்களுக்கு விரைந்து தடுப்பூசி செலுத்திட தமிழக அரசு திட்டமிட்டது. அதன்படி அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் (Mega vaccination camp) அரசு நடத்தி வருகிறது. மெகா தடுப்பூசி தினத்தன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரையில் தடுப்பூசி செலுத்தப்படும். கடந்த 10ம் தேதி  நடைபெற்ற ஐந்தாவது தடுப்பூசி  முகாமில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி  பல்வேறு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.


ALSO READ | Molnupiravir: கொரோனா சிகிச்சையில் முக்கிய மைல்கல்லாக இருக்குமா..!!!


இந்நிலையில் வரும் 23-ல் கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமைகளில் அசைவ பிரியர்கள் மற்றும் மதுப்பிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயங்குவதால் சனிக்கிழமை முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 50 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


ALSO READ | Covid தடுப்பூசி உற்பத்தி-விநியோகத்தில் இந்தியா அபாரம் - உலக வங்கி பாராட்டு


கடந்த மாதம் 12-ம் தேதி தமிழகத்தில் முதல் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது 28.91 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். கடந்த 19-ம் தேதி நடந்த இரண்டாவது தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அப்போது 16.43 லட்சம் பேரும், 26-ம் தேதி நடந்த மூன்றாவது முகாம் நடைபெற்றது. அப்போது 25.04 லட்சம் பேரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். நான்காவது மெகா தடுப்பூசி முகாம் கடந்த 3-ம் தேதி நடந்தது. அப்போது 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR