தமிழகத்தில் ரயில்வே பணியிடங்களில் தமிழர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்., ரயில்வே துறையில் காலியாக உள்ள ஹேங்மேன் மற்றும் சிக்னல் பணிகளுக்கான தேர்வு தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை நடைப்பெற்றது.


62,907 பணியிடங்களுக்கான தேர்வில் மதுரைக் கோட்டத்திற்கு தேர்வு  செய்யப்பட்ட 572 பேரில் 11 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தொழிற்பழகுநர் தேர்விலும் வடமாநிலத்தவர் அதிக அளவில் சேர்க்கப்பட்டு இருந்தனர். 


அதேபோல தற்போதும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர், முகவர்கள் உதவியுடன் ரயில்வே பணிகளைப்  பெற்று இருப்பதாக தெரிய வருகிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே பணியிடங்களுக்கு தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்.