Tamil Nadu Latest News: தூத்துக்குடி விமான நிலையத்தில், கோவை சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று செய்தியாளரிடம் பேசினார். அப்போது அவர், "‌கோவையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதலமைச்சர், பிரதமரை தரக்குறைவாக விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசு முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை விட தமிழகத்திற்கு அதிக திட்டங்களை கொடுத்துள்ளது. அதிகமாக 11 மருத்துவ கல்லூரிகள் தென்மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இரட்டை ரயில் பாதை திட்டம், இஸ்ரோ ராக்கெட் ஏவுதளம் போன்ற பல திட்டங்களை மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்துள்ளது.


பிரதமர் மோடியின் சுற்றுப்பயணம்


கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மோடிக்கு எதிர்ப்பலையை உருவாக்கி 38 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழகத்திற்கு எந்த திட்டங்களையும் பெற்று தரவில்லை. தற்போது பிரதமர் மோடிக்கு எதிரான அலையை ஏற்படுத்த திமுக முயற்சி செய்து வருகிறது. அந்த முயற்சி வெற்றி பெறாது. பிரதமர் நாடு முழுவதும் வளர்ச்சி இருக்க வேண்டும் என்ற வகையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். 


மேலும் படிக்க | சென்னை மக்களே உஷார்!! மெட்ரோ இரயில் பணிகளுக்காக தற்காலிக போக்குவரத்து மாற்றம்!!


ஆனால், தமிழகத்தில் அதிகாரம் ஒரு குடும்பத்தின் அடிமையாக உள்ளது. போதைப் பொருட்கள் கடத்தல் மேற்கொள்பவர்கள் திமுகவினரோடு எவ்வளவு நெருக்கமாக உள்ளனர். அவர்கள் குடும்பத்திற்கு என்னென்ன உதவி செய்தனர் என்பதை அனைவருக்கும் தெரிந்ததே. போதைப் பொருட்கள் புழக்கத்தால் தமிழகம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடைபெறும் மாநிலமாக மாறி உள்ளது.


தேவையான நிதியை மத்திய அரசு கொடுக்கிறது...


மேலும், திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது எட்டு வழி சாலை திட்டம், நீட் தேர்வு என பல திட்டங்களை தடுக்க முயற்சி செய்தது. நாடு முழுவதும் ஏழை எளிய மாணவர்களின் கல்விக்கு உறுதுணையாக இருக்கக்கூடிய நவோதயா பள்ளியை தமிழகத்தில் செயல்படுத்த விடாமல் திமுக தடுத்து வருகிறது.


மத்திய அரசு தமிழகத்திற்கு தேவையான நிதியை அவ்வப்போது வழங்கி வருகிறது. முக்கியமாக வளரும் மாநிலமாக உள்ள தமிழகத்திற்கு பல வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. திமுக மீது குற்றம் சாட்டுவதால் பாஜக நிர்வாகிகள் மீது வழக்கு தொடுக்கப்படும் என்றால் அதை பற்றி பாஜக ஒருபோதும் கவலைப்படாது. எத்தனை வழக்குகள் போட்டாலும் உண்மையை சொல்ல பாஜக தயங்காது.


திமுக வீழ்த்தி காட்டுவோம்


மத்திய அரசுக்கு உரிமையுள்ள  உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தில் எந்த மாநிலங்களும் தனிப்பட்ட முறையில் தலையிட முடியாது. எனவே குடியுரிமை சட்ட திருத்தத்தில் ஒவ்வொரு மாநிலமும் தனிப்பட்ட முறையில் எந்த முடிவும் எடுக்க முடியாது. தமிழ் மொழியை தமிழ் கலாச்சாரத்தை தமிழரின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்துச் செல்பவராக பிரதமர் மோடி இருக்கிறார். அப்படிப்பட்ட பிரதமர் மோடி வருகையின் போது தான் திமுகவினருக்கு தமிழ் பற்றிய பெருமை தெரிகிறது. தமிழகத்தில் திமுகவை வீழ்த்தி காட்டுவோம்" என்றார். 


மேலும் படிக்க | கொளுத்தும் வெயில்.. நாளை முதல் கோயில்களில் இலவசமாக நீர்மோர் வழங்க அரசு ஏற்பாடு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ