Corona prevention: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களின் பாதுகாப்பிற்காக கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகள் மும்முரம்
சென்னை: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மாநிலத்தின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இப்பூங்காவிற்கு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொது மக்கள் மட்டுமின்றி சென்னை வரக்கூடிய அனைவருமே சுற்றுலா செல்லக்கூடிய இடமாகவும் உள்ளது.
வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் அதிக அளவிலான பொதுமக்கள் வருகை தருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டு, பொங்கல் தினங்களில் (Festival Days) அதிகளவில் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது கொரானா தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வரும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையம் வழங்கிய பல்வேறு அறிவுரைகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. உயிரியல் பூங்காவிற்கு வருகை தரும் பார்வையாளர்கள் தங்கள் சொந்த பாதுகாப்பு மற்றும் விலங்குகளின் பாதுகாப்பிற்காக கோவிட் நடைமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பூங்காவிற்கு வருகைதரும் பார்வையாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கப்படுகிறது, பரிசோதனையில் உடல் வெப்பநிலை மாறுபாடுகள் உள்ளவர்கள் பூங்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவதில்லை.
பொதுமக்களின் பயன்பாட்டிற்காக பூங்காவினுள் (Vandalur Zoo) பல்வேறு இடங்களில் கை கழுவும் வசதிகள் மற்றும் தானியங்கி சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டுள்ளன. பார்வையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக 2 மீட்டர் தூர
இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
முகக்கவசம் இல்லாதவர்கள் நுழைவுசீட்டு வழங்கும் இடத்தில் முகக்கவசங்களை வாங்கி கொள்ளலாம். முகக்கவசம் அணியாதவர்கள் பூங்காவினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள். பூங்காவிற்குள் நுழையும் பார்வையாளர்கள் கிருமி நீக்கம் செய்யும் கால் குளியல் (பொட்டாசியம் பெர்மாங்கனேட் கரைசல்) வழியாகவும், வாகனங்கள் நுழைவுயும் போது டயர்கள் கிருமிநாசினியில் நனைந்த பிறகே செல்ல வேண்டும்.
READ ALSO | உசிலம்பட்டியில் பச்சிளம் குழந்தை மரணம் பெண் சிசுக்கொலையா?
பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, கோவிட் தொடர்பான வழிமுறைகள் ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவிக்கப்படுகின்றது. பாவையாளர்கள் கோவிட் நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்கள் அடங்கிய பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் நடமாட்டம் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவ்வப்போது கொரொனா நெறிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டு வரப்படுகிறது.
பார்வையாளர்களால் COVID-19 தடுப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதை மேற்பார்வையிடவும் மற்றும் கண்காணிக்கவும் துணை இயக்குநர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அவர்களின் தலைமையில் ஒரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தாண்டில் அனைவருக்கும் அறிஞர் அண்ணாஉயிரியல் பூங்கா புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதுடன், COVID நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான அனுபவத்தை பெற வாழ்த்துகிறது. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | தமிழகத்தின் ‘இந்த’ மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை தகவல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR