வர்தா புயல்: பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
வார்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறைவிடப்பட்டுள்ளது.
சென்னை: வார்தா புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறைவிடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நேற்று உருவாகி இருந்த "வர்தா' புயல் அதிதீவிர புயலாக மாறி இருந்தது. இந்தப் புயல் நேற்று சென்னை கரையைக் கடந்தது.
இந்தப் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
வர்தா புயல் நேற்று கரையைக் கடந்த்த நிலையில், மீட்புப் பணிக்கு கப்பல், விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மற்றும் மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் இதர கல்வி நிறுவனங்கள் இன்று தொடர்ந்து மூடப்படும். மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து அந்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார்.