உச்சம் தொடும் காய்கறி விலை; இன்றைய விலை என்ன
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தை விட தற்போது காய்கறி விலை அதிகரித்து இருக்கிறது.
தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை அதிகரித்திருக்கிறது.
இதனால் ஒரு கிலோ தக்காளி (Tomato) ரூ.50-க்கும், அவரை ரூ.60-க்கும், இஞ்சி ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் முதலே சென்னையில் காய்கறி விலை உயர்ந்து கொண்டு வருகிறது. அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக காய்கறி பயிரிடுவது தொடங்கி விளைச்சல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் காய்கறி வரத்தும் குறைந்துள்ளது.
ALSO READ: பண்டிகை காலத்தில் இனிப்பான செய்தி: சமையல் எண்ணெய் விலை குறைந்தது
இதனால் காய்கறி விலை கணிசமாக அவ்வபோது அதிகரித்திக்கொண்டே இருகிறது. சென்னையின் முக்கிய காய்கறி சந்தையான கோயம்பேடு மார்க்கெட்டிலும் காய்கறி விலை அதிகரித்து உள்ளது.
கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை நிலவரம்:
* பீன்ஸ்-ரூ.50,
* அவரைக்காய்-ரூ.60,
* பாகற்காய்-ரூ.45,
* கத்தரி-ரூ.40,
* வெண்டை-ரூ.40,
* புடலங்காய்-ரூ.35,
* கோவைக்காய்-ரூ.30,
* சுரைக்காய்-ரூ.35,
* பீர்க்கங்காய்-ரூ.40,
* பச்சை மிளகாய்-ரூ.30
* பீட்ரூட்-ரூ.30,
* கேரட்-ரூ.60,
* முள்ளங்கி-ரூ.30,
* முட்டைக்கோஸ்-ரூ.20,
* இஞ்சி-ரூ.70,
* தக்காளி-ரூ.50,
* சேனைக்கிழங்கு-ரூ.35,
* சேப்பங்கிழங்கு-ரூ.35,
* காலிபிளவர் (ஒன்று) -ரூ.30,
* முருங்கை-ரூ.40,
* உருளைக்கிழங்கு-ரூ.30.
காய்கறிகளின் விலை சமீப காலமாகவே தொடர்ந்து உயர்ந்து வருவதால் சென்னை வாசிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். காய்கறி வாங்குவதற்காகவே தினமும் பெரிய தொகையை செலவு செய்ய வேண்டியதாக உள்ளது. ஒரே நேரத்தில் தங்கம் விலை உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு, காய்கறி விலை உயர்வு என பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
ALSO READ: அக்டோபரில் அதிர்ச்சி: CNG, PNG விலைகள், விவரம் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR