வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேலூர் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.


கதிர் ஆனந்துக்கு ஆதரவாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். வேலூர் மண்டி தெருவில் இன்று நடைபெறும் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வாக்கு சேகரிக்கிறார். கூட்டணிக் கட்சித் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்கின்றனர்.


இதனையொட்டி அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்த்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்று மாலை 6 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை தேர்தல் தொடர்பான கூட்டமோ, ஊர்வலமோ நடத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டுமென தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இறுதிக்கட்ட பிரசாரம் என்பதால், அரசியல் கட்சிகள் தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபடுவார்கள், இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.