கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகியுள்ளதால் கடலோர மாவட்டங்களில் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கன்னியாக்குமரி பகுதியில் ஓகி புயல் காரணமாக பலத்த காற்று வீசியதால் இதுவரை கிட்டத்தட்ட 300-க்கு மேற்பட்ட மரம் விழுந்துள்ளது. நேற்று முதல் கன்னியாகுமரி அருகே உருவான ஓகி புயல் நகரத்தொடங்கியது. தாண்டவம் ஆடிய ஓகி புயல் இன்று கன்னியாகுமரியை விட்டு விலகிச் சென்றதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓகி புயல் காரணமாக தமிழகம் முழுவது மழை பெய்து வருகிறது. கிட்டத்தட்ட 9 மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் எந்த பகுதியில் எவ்வளவு மழை பெய்து உள்ளது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.