சென்னை வடபழனி முருகன் கோவில் வளாகத்திற்குள் கைப்பேசிகளை பயன்படுத்த தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் புகழ் பெற்ற வடபழனி முருகன் கோவிலுக்கு திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் 3000-க்கும் மேற்பட்டவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். வெள்ளிக்கிழமை மற்றும் வார இறுதி நாட்களில் பக்தர்களின் எண்ணிக்கை இருமடங்கு அதிகமாக உள்ளது.


கோவிலுக்கு வரும் சிலர் வளாகத்தில் நின்று செல்போனில் ‘செல்பி’ புகைப்படங்கள் எடுப்பதுமாய், சிலர் சன்னதி அருகிலேயே செல்போனில் பேசுவதுமாய் இருக்கின்றனர். இத்தகு செயல்கள் பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது.


எனவே கோவிலில் அமைதியை கடைபிடிக்கவும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும், கைபேசிகளை பயன்படுத்த தடை விதிக்க இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை கேட்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.


கைபேசிக்கு தடை விதித்தால் கோவிலுக்கு வருபவர்களின் செல்போனை வாங்கி வைக்க ஒரு மையம் அமைக்க வேண்டும். அந்த இடம் பக்தர்களுக்கு வசதியாக இருக்க வேண்டும் என்பதால் இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.


முன்னதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மதுரை மீனாட்சி சுந்தரேஷ்வரர் கோவிலில் பக்தர்கள் கைபேசிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது சென்னை வடபழனி கோவிலிலும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலிலும் கைபேசிகளை தடை விதிக்க முடிவு செய்துள்ளனர்.