இளம் மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டும் என்பதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தனியார் குழந்தைகள் மருத்துவமனை தொடக்கவிழா சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, 2 கோடியே 41 லட்சம் குழந்தைகள் ஒரு ஆண்டிற்கு இந்தியாவில் பிறப்பதாக குறிப்பிட்டார். ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்த வேண்டும் என்றும் மாநில அரசு அதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இளம் மருத்துவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், வெளிநாட்டில் சென்று மருத்துவம் படித்தாலும் மீண்டும் தாய் நாட்டிலேயே வேலை பார்க்க வேண்டும் எனவும் வெங்கையாநாயுடு வேண்டுகோள் வைத்தார்.


நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பிரசவத்தின் போது குழந்தைகள் இறப்பு விகிதம் தற்போது 50 சதவீதமாக குறைந்துள்ளதாக குறிப்பிட்டார். தமிழகம் மருத்துவ துறையில் ஏற்கனவே சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார்.