தமிழ் திரையுலகில் பிரபல நடிகரான நடிகர் விஜய் தற்போது சினிமாவை கடந்து அரசியல் ரீதியான பல்வேறு நுழைவுகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக தான் நடித்து வெளியான திரைப்படங்கள் தொடர்பான ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி மேடைகளில் பல்வேறு அரசியல் ரீதியான கருத்துக்களை வெளிப்படையாக பேசி தான் அரசியலுக்கு வருவதையும் வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக அம்பேத்கருடைய பிறந்த நாளன்று தமிழக முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் நேரில் சென்று அம்பேத்கருடைய சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அதிமுக ஆட்சியில் குட்கா மந்திரி பதவி விலகினாங்களா? செந்தில் பாலாஜி சரமாரி கேள்வி


இதை தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் பேரணியாக சென்று அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தினர். இந்த நடவடிக்கை என்பது நடிகர் விஜய் அரசியல் ரீதியான நுழைவை அறிவிக்கும் வகையிலாக அமைந்திருந்தது. இதனை தொடர்ந்து நடிகர் விஜய் தனது விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகளிடம் பல்வேறு கட்டமாக ரகசிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். மேலும், தமிழக முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் விவரங்கள் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தொகுதியில் உள்ள வாக்காளர்கள் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை விஜய் மக்கள் இயக்கத்தினர் சேகரித்து தரவும் ரகசிய உத்தரவு பிறப்பித்துள்ளார். 



இந்த நிலையில், நடிகர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு ’2024 பாராளுமன்றமே.. 2028-ன் சட்டமன்றமே..!’ என்ற வாசகங்களுடன், விரைவில் மதுரையில் மாநாடு.. என்று மதுரை முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சரா்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இது பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள், ஒருவேளை நடிகர் விஜய் மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளாரோ?, மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறாரா? என்ற யூகங்களை எல்லாம் அப்பகுதியில் விஜய் ரசிகர்கள் கிளப்பியுள்ளனர்.


இந்த போஸ்டர்கள் அரசியல் வட்டாரத்திலும் கவனிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் ரசிகர்களின் இந்த போஸ்டர் குறித்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ரியாக்ஷன் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதனால் தலைமையின் சிக்னலின்படியே விஜய் ரசிகர்கள் இப்படி நடப்பதாக கிசிகிசுக்கப்படுகிறது.  


மேலும் படிக்க | Jallikattu Verdict: ‘கலாச்சாரத்துடன் ஒன்றியது ஜல்லிக்கட்டு’உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ