இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட உள்ளது, நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் பிரேக் கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசி உள்ளார்.  முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் 107 வது பிறந்தநாள் விழா கொண்டாட்ட பொதுக்கூட்டம் மதுரை கீரைதுரை பகுதியில் அதிமுக சார்பில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் திரைப்பட நடிகரும் அதிமுக நட்சத்திர பேச்சாளர் சிங்கமுத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசும்போது, எம்ஜிஆர் குறித்து இன்று தமிழகம் முழுவதும் பேசவே தேவை இல்லை. ஏனென்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவர் குணம், செய்த சாதனைகள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ராமர் கோவில் பிரசாதம், விஐபி பாஸ் என களைகட்டும் மோசடி! முழுப் பின்னணி!


திரைப்படம் வாயிலாக நற்கருத்துகளை பரப்பியவர் எம்ஜிஆர். இன்றைக்கு 4 படம் நடித்தவுடன் நான்தான் முதல்வர் என்று சொல்லிக்கொண்டு அலைகிறார்கள். வாயை வாடகைக்கு விடும் கமல்ஹாசன் இன்றைக்கு கொள்கை இன்றி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சீட்டுக்கு கூட்டு சேர்ந்துள்ளார். நடிகர் விஜய் நெல்லை, தூத்துக்குடி மழை வெள்ளத்தில் நிவாரணம் கொடுத்து உதவினார், மற்ற ரஜினி கமல் யாராவது கொடுத்தார்களா? இவர்கள் வீணாய் போனவர்கள் நாட்டை கெடுகிறார்கள்.  விடியல் தருவோம் என்று கூறி 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை கொடுத்து ஒரு வாக்குறுதியை மற்றும் நிறைவேற்றி உள்ளார். மேலும் ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகளுடன் நடித்த உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்.


ஆண்டுகள் 6 சதவீதம் மின்கட்டணத்தை உயர்த்த மத்திய அரசிடம் அனுமதி பெற்று 150 சதவீதம் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளார் முதல்வர்.  தொட்டியில் குழந்தை திட்டம், அம்மா உணவகம், தாலிக்கு தங்கம், மகளீர் காவல்நிலையம் என பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்கு வழங்கி சாதனை படைத்தவர்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இன்றைக்கு அனைத்து திட்டத்திற்கு மூடு விழா நடத்தி வருகிறது திமுக அரசு. அனைத்து மகளிருக்கு 1000 ரூபாய் வழங்குவோம் என கூறி தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்குவதாக சொல்கிறார்கள், விலைஉயர்வு க்கு நடவடிக்கை எடுக்க வக்குஇல்லாத அரசு. போதை பொருள் மட்டும் மலிவாக இளைஞர்களுக்கு கிடைக்கிறது.


பொங்கல் தொகுப்பு 1000 ரூபாய் தற்போது வரையில் 75 சதவீதம் பேருக்கு மட்டும் கொடுத்துள்ளார்கள், 1000 ரூபாய் மக்களுக்கு பத்தாது பத்தாயிரம் ரூபாய் கொடுக்கணும். கலைஞர் நூலகம் எதற்கு காட்டினார்கள், மதுரை மக்கள் யாரும் அதை கேட்கவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு எதற்கு இவ்வளவு செலவு செய்து மைதானம்.  அணையில் தெர்மாகோல் போட்ட என்னை தற்போது வரையில் கேலி செய்து வருகின்றனர். ஆனால் தற்போது உள்ள திமுக அரசு வெள்ளம் வந்தாலே நேரில் வந்து மக்களை சந்திக்க வரவில்லை முதல்வர். தமிழர் உரிமைக்கு அதிமுக எப்போதும் பாராளுமன்றத்தில் குரல் கொடுப்போம். இளைஞர் அணி மாநாட்டில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. எனவே நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு மக்கள் பிரேக் கொடுக்க வேண்டும். காவிகள் என எந்த மலை பேசினாலும் எல்லா மலையையும் திராவிட மண் உருட்டி விட்டெரியும்., வேறு எவருக்கும் இந்த மண்ணை ஆள வக்கில்லை என்று பேசினார்.


மேலும் படிக்க | அன்னதானத்திற்கு 50 கோடி ரூபாய் கொடுத்தாரா பிரபாஸ்? இல்லைப்பா இல்லை! ஆனா...


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ