திருமண பரிசாக வழங்கப்பட்ட தக்காளி மற்றும் விறகடுப்பு!
தக்காளியின் விலை அதிகரித்து வரும் நிலையில் மணமக்களுக்கு தக்காளி திருமண பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
உணவு சமைப்பதற்கான காய்கறிகளில் மிக முக்கியமாக இருப்பதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய உணவு வகைகளிலும் தென்னிந்திய உணவு வகைகளான குழம்பில் இருந்து ரசம், கூட்டு, தக்காளி சாதம் என்று சமையலில் எங்கு பார்த்தாலும் தக்காளி இல்லையென்றால் சமையலே இல்லை எனும் அளவிற்கு தக்காளி உள்ளது. அப்படிபட்ட தக்காளியின் விலை தற்போது திடீர் என்று கிடு கிடுவென உயர்ந்து கிலோ 120 வரை ஆகி பொதுமக்களை திணற வைத்துள்ளது. இந்தநிலையில் கோவையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் தக்காளியை பரிசாக அளித்து மணமக்களை ஆச்சர்யபட வைத்த நிகழ்வும் அரங்கேறியுள்ளது.
மேலும் படிக்க | அடேங்கப்பா, விண்ணை முட்டும் தக்காளி விலை; ரூ.120 க்கு விற்பனை
கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தெற்கு நகர இளைஞரணி பொருளாளராக இருப்பவர் அக்கீம். இவரது மகளான அப்சானாவிற்கும், ஹாரீஸ் என்பவருக்குமான திருமண நிகழ்ச்சி கோவை குணியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் மக்கள் இயக்க இளைஞரணி நிர்வாகிகள் திடீரென மணமக்களுக்கு தக்காளி பரிசு வழங்கி ஆச்சரியப்படுத்தினர். இதனை சற்றும் எதிர்பார்க்காத மணமக்களும் அங்கு கூடியிருந்தவர்களும் வியப்பின் உச்சிக்கு சென்றனர். இந்நிலையில் இது வரை இல்லாத அளவிற்கு தக்காளியின் விலை உயர்ந்துள்ள நிலையில் மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கடந்த முறை தக்காளி விலை உயர்வின் போதும் விஜய் ரசிகர்கள் இதே போல மணவிழாவில் தக்காளி பரிசு வழங்கியது குறிப்பிடதக்கது.
மேலும் மற்றொறு இடத்தில் திருமண விழாவில் மணமக்களுக்கு விறகு, மண் அடுப்பு, பெட்ரோல் பரிசாக உறவினர்கள் வழங்கி உள்ளனர். நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது மத்திய அரசு இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சேலம் 5 ரோடு பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் ஏற்காட்டை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரியான மணமகன் முகமது இம்ரான் அராபாத் திருநெல்வேலியைச் சேர்ந்த மணமகள் ஆடிட்டர் பாத்திமா இர்பானா திருமணம் நடைபெற்றது.
இந்த திருமண விழாவில் சமையல் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறிக்கும் விதமாக மண் அடுப்பு விறகு மற்றும் பெட்ரோல் பரிசாக வழங்கினார். இன்றைய காலகட்டத்தில் மணமக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதிகரித்து வரும் விலை உயர்வு காரணமாக பழங்கால முறைப்படி மண் அடுப்பை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பரிசு வழங்கப்பட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர். இந்த நிகழ்வு திருமண விழாவிற்கு வந்த மக்களிடையே பேசும் பொருளானது.
மேலும் படிக்க | டாஸ்மாக் சென்று குடிமகனின் குறை தீர்த்த திமுக எம்எல்ஏ! வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR