நடிகர் விஜய்-க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரலாம் என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான மனுவை மூவர் குழுவிடம் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார். சுற்று சூழலையும், மக்கள் நலனையும் பாதிக்கும் விதத்தில் இருக்கும் திட்டங்களை மக்கள் நீதி மய்யம் எதிர்ப்பதாகவும், வளர்ச்சியில் எப்போதும் தங்கள் கட்சிக்கு விருப்பமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதைத்தொடர்ந்து சர்கார் இசை வெளியீட்டு நிகழ்ச்சியி நடிகர் விஜய் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு "விஜய் தம்பிக்கு விருப்பம் இருந்தால் அவர் அரசியலுக்கு வரலாம். அவர் ஊழல் ஒழிப்பை கொள்கையாக கொண்டு இருப்பதை ஊர்ஜிதப்படுத்தினால் அவருக்கு மக்கள் நீதி மய்யத்தின் ஆதரவு நிச்சயம் இருக்கும்" என தெரிவித்துள்ளார்.


உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையினை குறைக்க மத்திய அரசு முன்னெடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து கேட்டப்போது... "அதற்காக அரசுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றில்லை, அது அவர்களது கடமை" என தெரிவித்துள்ளார்!