உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி

உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய் மக்கள் இயக்கம் சுயேட்சையாக போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் விருப்பமுள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட உள்ளாட்சி தேர்தலில் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
தளபதி விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 20 மாவட்ட நிர்வாகிகளை நேற்று புஸ்ஸி ஆனந்த் அவர்கள் பனையூரில் உள்ள அலுவலகத்தில் நேற்று சந்தித்துப் பேசியுள்ளார். அதில் தற்போது தேர்தல் நடைபெற உள்ள 9 புதிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இன்னும் சில மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் என 20 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். அதில் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும் விரைவில் நடைபெற இருக்கும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் மக்கள் இயக்கத்தினர் சுயேட்சையாக போட்டியிட்டுக் கொள்ளலாம் என அந்த இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள் கூறியிருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்டபோது இது வழக்கமான முறை. ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு இருக்கின்றனர். அதில் வெற்றியும் அடைந்திருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர். அதே போல் வரும் தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR