விஜயகாந்த் பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து
இன்று தனது வீட்டில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமது 65-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
விஜயகாந்துக்கு மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார்கள். மைத்துனர் எல்.கே.சுதீஷ் மற்றும் குடும்பத்தினர் விஜயகாந்துக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
விஜயகாந்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க அவரது வீட்டில் தொண்டர்கள் குவிந்தனர். தொண்டர்கள் முன்னிலையில் பிறந்தநாள் கேக் வெட்டினார். மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கப்பட்டது.
பிறந்த நாளையட்டி விஜயகாந்துக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.