திமுக ஆட்சியில் ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு பாதுகாப்பு இல்லை! விஜயகாந்த் கண்டனம்
சென்னை சைதாப்பேட்டையில் போக்குவரத்து ஊழியர் ஒருவரை காவலர் ஒருவர் சரமாறியாக தாக்கியதற்கு தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை சென்னை சைதாப்பேட்டையில் காவலர் ஒருவர், போக்குவரத்து ஊழியரை தாக்கியது பெரும் சர்ச்சையானது. மேலும் இதற்கான தண்டனையாக அந்த காவலர் லூயிஸ் ஜான் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரை காத்திருப்பு பட்டியலில் வைத்திருப்பதால் எந்த ஒரு உபயோகமும் இல்லை எனவும், தாக்குதல் நடத்திய காவல் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை
"திமுக ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு கண்டனம்
திமுக ஆட்சியில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் நடத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. மதுராந்தகம் அருகே அரசு பேருந்து நடத்துனர் ஒருவர் திமுகவை சேர்ந்தவரால் அடித்து கொல்லப்பட்டார்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே வன்முறை அதிகரிக்கும் என்பதை உண்மையாக்கும் விதமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.
மேலும் எச்சில் துப்பியதாக கூறி அரசு பேருந்து ஓட்டுனர் ஒருவர் காவலரால் தாக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது.
பேருந்து ஓட்டுளர்கள் மற்றும் நடத்துனர்களை மாணவர்கள், பொதுமக்கள், காவல்துறையினர் ஆகியோர் தாக்குவது தொடர் கதையாகி வருகிறது.
பணியின் போது அரசு பேருந்து ஓட்டுனர்கள் தாக்கப்படுவது அராஜகத்தின் உச்சம். தாக்குதல் நடத்திய காவலரை காத்திருப்பு பட்டியலில் வைத்திருப்பதால் எந்த உபயோகமும் இல்லை.
தாக்குதல் நடத்திய காவலருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்."
என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | விக்ரம் படத்தில் எத்தனை பாடல்கள்?... அனிருத் வெளியிட்ட லிஸ்ட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR