மருத்துவர்கள் சொல்லியும் கேட்காமல் 2016 -ல் பிரச்சாரத்துக்கு சென்ற விஜயகாந்த்
Vijayakanth: மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்துக்கு 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது காற்று கண்ணில் படக்கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனையும் மீறி அவர் தேர்தல் பிரச்சாரம் செய்துள்ளார்.
மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திரையுலகினரும், அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமையகத்தில் வைக்கப்பட்டிருக்கும் அவரது உடலுக்கு அலைஅலையாக மக்கள் நேரில் அஞ்சலி செலுத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் 2016 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது விஜயகாந்த் அவர்களுக்கு இருந்த உடல் பிரச்சனை குறித்தும், அதனை பொருட்படுத்தாமல் கூட தனக்காக அவர் பிரச்சாரம் செய்ததையும், மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி அவர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், " தேமுதிக நிறுவன தலைவர் புரட்சிக் கலைஞர் டாக்டர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற அதிர்ச்சியான தகவல் பேரிடியாக வந்து இறங்கியது. திரையுலகின் துருவ நட்சத்திரம் மறைந்து விட்டது. ஒரு நல்ல தலைவரை தமிழ்நாடு இழந்து விட்டது. சகோதரர் சுதீஷ் மூலமாக அறிமுகப் படுத்தப்பட்டேன். அரசியல் கடந்து என்மீது அன்பு செலுத்தியவர். என்னை எங்கு பார்த்தாலும் ஆல் காட்டி விரலை அசைத்து நாக்கை கடித்து கண்ணை சிமிட்டுவார். இதைப் போன்று அவர் சிலப்பேருக்கு மட்டுமே செய்வார்கள். அவரின் இதயத்தில் எனக்கும் ஒரு இடம் இருந்தது
மேலும் படிக்க | 24 வயதில் மாரடைப்பால் உயிரிழந்த பிரபல நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் நான் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டபோது, காஞ்சிபுரம் வந்து ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசினார். அவருக்கு கண்ணில் காற்றுப் படக்கூடாது என்று மருத்துவர்கள் ஆலோசனை. ஆனால் தேர் ஓடிய காஞ்சிபுரத்தின் ராஜா வீதியில் எனக்காக பிரச்சார வாகனத்தில் ஏறி நகரம் முழுவதும் நின்று கொண்டே பிரச்சாரம் செய்து விட்டு பொன்னேரிக் கரையில் விடைபெறும் போது வாகனத்தில் அமரவைத்து சொன்னார். நேற்று இரவு நண்பர்களுடன் உன்னைப் பற்றி உன் பண்புநலன் குறித்து பேசினோம். உன்னைப் போன்றவர்கள் வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வது உன்மையான ஜனநாயகம் என்று சொல்லி விட்டு வாய்ப்பு கிடைத்ததால் மீண்டும் பிரச்சாரத்திற்கு வருகிறேன் என்று வாழ்த்தி விட்டு சென்றார்.
அதேபோன்று 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அவர் போட்டியிட்ட உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி பிரசாரத்திற்கு செல்லும் முன், நான் போட்டியிட்ட திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்கு, திருக்கழுக்குன்றம் வந்து ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து விட்டு சென்றார். திரையுலகின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. மனிதாபிமானம் கொண்ட அரசியல் ஆளுமை விடைபெற்றது. கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை மனது ஏற்க மறுக்கிறது. புரட்சிக் கலைஞர் டாக்டர் கேப்டன் விஜயகாந்த் அவர்களே போய்வாருங்கள் உங்களைப் போன்றவர்கள் அரிதாகத்தான் இந்த மண்ணில் தோன்றுவார்கள்" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் காலமானார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ