விக்கிரவாண்டியில் மலர்ந்தது இலை; அதிமுக 44,551 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
தமிழக இடைத்தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை வகிக்கிறது. அதிலும் விக்கிரவாண்டியில் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 44,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னை: நாடு முழுவதும் கடந்த 21 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிகப்பட்டு வருகின்றனர். அதில் தமிழகத்தை பொறுத்த வரை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணி காலை முதலே முன்னிலை பெற்று வந்தது. தற்போது விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 14,782 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறங்கிய முத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் 66 ஆயிரம் வாக்குகள் மட்டும் பெற்றார். அந்த தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு 2 ஆயிரம் ஓட்டுக்கள் கிடைத்தன.
அதேபோல நெல்லை மாவட்டம் நாங்குநேரி தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளரை விட அதிமுக வேட்பாளர் நாராயணன் சுமார் 19 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்று வருகிறார். ஏறக்குறைய இந்த தொகுதியிலும் அதிமுக வெற்றி பெரும் நிலை உருவாகி உள்ளது.
ஹரியானா மாநிலத்தில் யாரும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதேபோல மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்த வரை பாஜக-சிவசேனா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.