விராலிமலையில் இன்று 1,353 காளைகள் மற்றும் சுமார் 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று அசத்திய ஜல்லிக்கட்டு போட்டி உலக சாதனையில் இடம்பிடித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உலக சாதனை படைக்க ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக முதல்வர் எடப்பாடி முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், விஜயபாஸ்கர்,சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த போட்டியில் 1,353 காளைகள் பங்கேற்றன. 


இந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை நிறைவு பெற்றது. இந்த போட்டியில் மாடுபிடி வீரர்கள் உட்பட 41 பேர் காயம் அடைந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 21 காளைகளை பிடித்து திருச்சியை சேர்ந்த முருகானந்தம் முதலிடம் பிடித்தார். திருச்சி காட்டூரை சேர்ந்த கார்த்தி என்பவர் 16 காளைகளை பிடித்து 2ம் இடம் பிடித்தார்.


இந்நிலையில், விராலிமலையில் 1,353 காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு போட்டி உலக சாதனை படைத்தது.