விருதுநகர் அருகே மேல ஆமத்துார் பகுதியில் பட்டா மாறுதலுக்கு ரூ.7,000 லஞ்சம் வாங்கிய VAO அதிகாரி ஆம்ஸ்ட்ராங்கை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விருதுநகர் அருகே சேர்வைக்காரர்பட்டியை சேர்ந்தவர் நாச்சான் (வயது 40). தன் தந்தையின் பெயரில் உள்ள நிலத்தை தன்னுடைய பெயருக்கு பட்டா மாறுதல் செய்யக் கோரி மேல ஆமத்துார் VAO ஆம்ஸ்ட்ராங்கிடம் மனு அளித்துள்ளார்.


தந்தை பெயரில் இருக்கும் நிலத்தினை மகன் பெயருக்கு பெயர் மாற்றம் செய்வதற்காக ரூ.10,000 லஞ்சம் கேட்டு, பின்பு ரூ.7,000 லஞ்சமாக பெற்றுக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளார் ஆம்ஸ்ட்ராங். இதுதொடர்பாக விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை இன்ஸ்பெக்டர் பூமிநாதனிடம் நாச்சான் புகார் அளித்துள்ளார். 


விருதுநகர் லஞ்ச ஒழிப்புத் துறை DSP ரகுபதி தலைமையில் காவல்துறையினர் ரசாயன பொடி தடவிய ரூபாய் தாள்களை நாச்சானிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்தப் பணத்தை மேல ஆமத்துார் அலுவலகத்தில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கிடம் கொடுத்துள்ளார் நாச்சான். 


இந்நிகழ்வின் போது கையும் களவுமாக காவல்துறையினர் ஆம்ஸ்ட்ராங்கை கைது செய்தனர். இவர் 2014-ல் விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலில் பட்டா மாறுதலுக்கு ரூ.3,500 லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்களால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.