சென்னை: தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இடையே கடும் போட்டி நடந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக பொது செயலாளர் சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் கிழக்கு கடற்கரையான கூவத்தூரில் உள்ள சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. 


எம்எல்ஏக்கள் சிறை வைக்கப்பட்டு உள்ளனர் என குற்றச்சாட்டு எழுந்து வருகிறது, அது அவர்கள் தரப்பில் மறுக்கப்பட்டும் வருகிறது. சொகுசு விடுதியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை சசிகலா சந்தித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். 


இதற்கிடையே எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களை காணவில்லை என்று தமிழகம் முழுவதும் கூறப்பட்டு வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டு உள்ளனர் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில் நேற்று எம்.எல்.ஏ.க்களுடன் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, எம்.எல்.ஏ.க்கள் யாரையும் நாங்கள் அடைத்து வைக்கவில்லை என்றும், அவர்கள் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்றார். 


இந்நிலையில் 3-வது நாளாக சசிகலா கூவத்தூர் செல்கிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அங்கு எம்.எல்.ஏ.க்களுடன் இன்றும் ஆலோசனை நடத்துகிறார்.