மக்களவை தேர்தலில் ஒப்புகை சீட்டு: தேர்தல் ஆணையம்
மக்களவை தேர்தலில் ஒப்புகை சீட்டு வழங்கும் முறை நடைமுறை படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
மக்களவை தேர்தலில் ஒப்புகை சீட்டு வழங்கும் முறை நடைமுறை படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
மக்களவை தேர்தலில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன், யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களை அமைக்க உத்தரவிட வேண்டும் என சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் பாக்கியராஜ் என்பவர் பொது நல வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வரும் மக்களவை தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில், அனைத்து வாக்குச்சாவடிகளிலும் VVPAT மூலம் ஒப்புகை சீட்டு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.