ஊதியம் இன்று மாலைக்குள் ஊழியர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் சென்னையில் பெரும்பாலான அரசு பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 


இதுகுறித்து று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசும்போது, "நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வங்கிக்கணக்கில் செலுத்த முடியவில்லை. இன்று மாலைக்குள் ஊதியம் வழங்கப்படும். ஊதியம் வழங்க ஒருநாள் கால தாமதம் ஆவதால் போராட்டத்தில் ஈடுபடுவது நியாயமாகாது. 


அதேபோன்று போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்பு எதுவும் கிடையாது; தேவையில்லாமல் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். வழக்கம்போல முழுத் தொகையும் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் பணிக்கு திரும்ப கோரிக்கை விடுத்துள்ளோம். பெரும்பாலான போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பிவிட்டனர்" என்று கூறினார்.