எச்சரிக்கை!! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் -வானிலை மையம்!
வட கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கிமீ வரை காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை!!
வட கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கிமீ வரை காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை!!
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழை வெளுத்து வாங்குகிறது. இதையடுத்து, சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் பகலில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அந்த வேப்பசலனம் காரணமாக சென்னையின் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்..!
வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையோ அல்லது இடியுடன்கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரையில், வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வட கடலோர பகுதிகளில் மணிக்கு 35 முதல் 55 கிமீ வரை காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ளது.