காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்துவருவதால் காவிரி ஆற்றில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 21,000 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து 11,000 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. 


இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்-க்கு 28,000 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்த நிலையில், நேற்று மாலை 20,742 கனஅடி-யாக அதிகரித்தது. இந்நிலையில் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கின்றது.


தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மீண்டும் அதிகரித்துள்ளதால், அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


மேலும் முக்கொம்பு அணையில் கொள்ளிடம் மதகுகள் உடைந்துள்ளதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தை, பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.