11:54 | 24-08-2018


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் இந்த வழக்கை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், முல்லைப்பெரியாறு அணையில் ஆகஸ்ட் 31 வரை 139.99 அடிவரை நீர் தேக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. 




கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நாங்கள் காரணமில்லை என கேரளாவின் குற்றச்சாட்டுக்கு தமிழக அரசு பதில். 


வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு முல்லைப் பெரியாறு அணையின் வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட்டதே காரணம் என கேரள மாநில அரசின் சார்பில் மாநிலத் தலைமைச் செயலாளர் டாம் ஜோஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கேரளத்தின் வெள்ளப்பாதிப்புக்கு முல்லைப் பெரியாற்றில் ஆகஸ்டு 15 ஆம் தேதி வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட்டதே காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார். முதலில் நொடிக்கு ஒன்பதாயிரம் கனஅடி நீரும், பின்னர் நொடிக்கு 21 ஆயிரத்து 450கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். 


இதனால் அதிக மழை பெய்யும்போது ஒருநாளில் வரும் நீர்ப்பெருக்கைத் தாங்கும் அளவில் அதன் உச்சநீர்மட்டத்தில் இருந்து நீர் தேக்கும் அளவைக் குறைக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். அணையின் நீர்மட்டம் 136அடியை எட்டும்போதே அணையின் வெள்ளநீர் மதகுகளைத் திறந்துவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். வெள்ளநீர் மதகுகளைத் திறப்பதற்குப் புதிய அட்டவணை தயாரிக்கவும் நீர்தேக்கும் அளவை உயர்த்தியதைத் திரும்பப் பெறவும் மேற்பார்வைக் குழுத் தலைவரிடம் தாங்கள் கோரிக்கை விடுத்ததையும் குறிப்பிட்டுள்ளார்.


இதையடுத்து, கேரளாவின் குற்றச்சாட்டு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு நாங்கள் காரணமில்லை என்றும் இடுக்கிக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 2 டிஎம்சி தண்ணீர் தான் திறக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.